Friday, August 14, 2009


பல்லவி

என்னோட உயிரே.. என்னோட உயிரே..

எந்தன் நெஞ்சில் நீ வா., எந்தன் நெஞ்சில் நீ வா..

என்னோட உயிரும் உன்னோட உயிரும்

இதயத்தை விடுத்து விண்ணோடு கலக்கும்

கனவாக நீ இருந்தால் உறக்கம் பிடிக்கும்

கண்ணே நீ இல்லையென்றால் உலகம் வெறுக்கும்

சரணம்

முதல் முதல் பார்த்தும் முடிவேடுதேனே

எமன் வந்து கேட்டாலும் எதிர்த்து நிப்பேனே

உன் சுவாசம் என் வாசம்

உன்னை கண்டால் ஒரு ஏக்கம்

உன் சுவாசம் என் வாசம்

காலை நிலவை அழகாய் பார்த்தேன்

மாலை அவளிடம் காதலை சேர்த்தேன்

போடா நீ என் தம்பி என்றாய் !!!

சரணம்

எனக்குள்ளே இருக்கும் இதய துடிப்பும்

கேட்டாலே போதும் உன்பெயர் தானே சொல்லும்

உன்னை தவிர வேறொரு பெண்ணை

மனதில் நினைக்க விருப்பம் இல்லை

மரணம் கூட இன்றே வந்தால்

மகிழ்ச்சியாய் ஏற்பேன் நீ என்னை சேர்ந்தால்

போடா நீ என் தம்பி என்றாயே !!!

Thursday, July 16, 2009

இன்று கவலை இல்லை,

வானம் நமது எல்லை,

குழந்தை உள்ளம் போலே நாம் ஆடலாம் !!

நேற்று முடிந்த தொல்லை,

நாளை பிறக்க வில்லை,

இந்த நாளை மட்டும் கொண்டாடலாம் !!

வாடா வா வாழ்க்கை அழைக்கிறது

வாழ வா

வகுப்புகள் இங்கு தேவைஇல்லை

விளையாடவா!!!

சிறகுகள் விரிக்கலாம்

காற்றினில் பறக்கலாம்!!!

நண்பா நாமெல்லாம், கேன்வாஸ் போலே

வர்ணங்கள் அதிகம் நீ தீட்டு

சுற்றிபார் பூமி உனதே

இன்ப இசை மீட்டு

ஏன் என்ற கேள்வி

உன்னுள் பிறக்க

அதுவே உந்தன் சாவி

உன் விதி

நீ கண்ட கனவு

உண்மையென

உண்மையென

ஊர் சொல்ல

உண்மையாக்க

வா வாழலாம் !!!

Friday, June 19, 2009

என்னுடைய பழைய கவிதைகள்ல ஒன்னு

மாணவன்
நாங்கள் எல்லாம்,
இரம் படாத தீக்குச்சிகள் தான்,
ஆனால் ஆசிரியபெட்டி எங்களை உரசும்
விதத்தில் தான்,
நாங்கள் நாளைய இந்தியாவிற்கு ஒளி கொடுப்போம் !!!

Tuesday, May 26, 2009

காதலியின் சிரிப்பிற்காக !!!


மலரின் நிறமோ,
மலரின் மனமோ,
வேர்கள் அறியாது !!
இருந்தபோதும்
வேர்கள் இன்றி
மலர்கள் கிடையாது !!
நீ வளர்ந்து நிற்க
வானம் பார்க்க
மண்ணில் புதைகின்றேன்
காதலி
உன் சிரிப்பிற்காக
என் காதல் அழிக்கின்றேன் !!!

Friday, May 22, 2009

கண்களின் காரணம்





என் பார்வைக்காக மட்டுமே கிடைக்க பெற்றது என் கண்கள் என்று இருந்தேன்...


உன்னை பார்த்த பின்பே என் கண்களின் காரணம் அறிந்தேன்..!!!



இசை பாடா இதயம்



இமையாகவே நீ இருபதனால் கனவுகள் நீயே !!


நிழலாக நீ இருப்பதனால், நினைவுகளும் நீயே !!


கதிராக நீ இருப்பதனால் விடியலேல்லாம் நீயே !!


நிலவொளியாக நீ இருப்பதனால் இரவுகளும் நீயே !!


உணவாக நீ இருப்பதனால் ருசிபத்தெல்லாம் நீயே !!


உறவாக நீ இருப்பதனால் என் உரிமைகளும் நீயே !!


உடலாக நீ இருப்பதனால் உணர்வதெல்லாம் நீயே !!


உயிராக நீ இருப்பதனால் என் உதிரத்திலும் நீயே !!


எதுவாக நீ இருந்தபோதும் நீ எனதாகவில்லை


நீ இருந்தாடிய இதயம் இன்று இசை பாடவில்லை !!!




Friday, February 13, 2009

Hey i have created a Blog


Hello guys,

This is Senthil kumar Madhan, i am 23 and currently doin my MBA, an ardent fan of Music, food, films and my very own chennai.

and obviously will be writing about all of those here.

since to day is the first day, i will just give one intersting fact..

What came first Orange the fruit or the Color...!?!?

Its the Fruit and perhaps orange is the onlt color which owes its name to a fruit..!?!?

more of these coming.. wait and watch..!?!?